தமிழகம் முழுவதும் குரூப் 2 குரூப் 2a தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கான உத்தேச விடைகளை மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அதன்படி உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் கருத்துகள் ஆகிவற்றை இன்று மாலைக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது