Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய சிக்கல்…. டிஎன்பிஎஸ்சி உத்தரவால் தேர்வர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60,000 பேர் தங்கள் ஹால் டிக்கெட்டை முதன்மை தேர்வுக்காக இ சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால் ஏராளமான தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட்டில் அரை கண்காணிப்பாளர்கள் கையெழுத்திடாதது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் இருந்துள்ளதாக தேர்வர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |