Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில்,இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட அனைத்து போட்டி தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன. அவ்வகையில் தமிழக அரசு துறையில் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வு கடந்த மே 21ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் முடிவுகள் பொதுவாக ஜூன் மாதம் இறுதியில் வெளியாகும். அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோரில் ஒரு பதவிக்கு 10 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பரில் பிரதான தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் இந்த மாதமாவது குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |