Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு முடிந்து…. ரயிலில் வீடு திரும்பிய…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய  அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து காற்று வாங்குவதற்காக ரயில் படிக்கட்டு அருகே வந்து நின்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மனீஷா படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனிஷாவின் அப்பா மற்றும் அக்கா கணவர் இருவரும் எழுந்து பார்த்தபோது மனிஷா அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் தண்டவாள பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டபோது கோப்பைநாயக்கர்பட்டி பகுதியில் அருகே உள்ள தண்டவாள பகுதியில் மனிஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மனிஷாவின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலந்தாய்வில் மனிஷுவிற்கு ஊரக மருத்துவ துறையில் இட ஒதுக்கீடு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ரயிலில் தவறி விழுந்து இறந்துள்ளது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |