தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து குரோம்பேட்டையில் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி தற்போது சென்னை நந்தனத்தில் புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. குரூப் 4 தேர்வு வர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் நடராஜ் வழிகாட்டுதலில் நடைபெறுகின்றது.
இதில் பொது தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண்களை உறுதியாக பெறுவதற்கான உத்திகளை ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்கள் ஆல் கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்கள் கற்றுத் தரப்படும். அதன்படி வருகிற 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேரமாக இந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வழிகாட்டி என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
இந்தப் புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் “GROUP – IV ONE DAY FREE COACHING” என்று டைப் செய்து 9962664441 என்ற எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் முகவரியை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 9962996072, 9962664441, 9962668885 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.