தமிழகத்தின் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இதனால் தற்போது குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 2569 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே மொத்தம் 9870 காலி பணியிடங்களாக இது உயர்ந்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.