Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது

இந்த நிலையில், குரூப்-4 தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை எழுப்பி வந்ததனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வுகளில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி இருந்தது.

அதில், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி பாட பகுதிகளிலிருந்து 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.  பொது அறிவு பகுதியில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த நிலையில் தற்போது ஆங்கில விருப்ப மொழி தேர்வு செய்யும் வழக்கம் நீக்கப்பட்டுள்ளது. எனவே கட்டாயமாக 150 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழியில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.

இந்த பகுதியில் மொத்தம் 40 வினாக்களுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே அவர்களின் பொது அறிவு பகுதி மதிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் தேர்வர்களின் விடைத்தாள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |