Categories
அரசியல் மாநில செய்திகள்

குரூப் 4 முறைகேடு : ஜெயக்குமார் எங்கே ? ”3 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி”

குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதே போல அவருடைய கூட்டாளியாக இருக்கக்கூடிய காவலர் பூபதி என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து அவர்கள் 2 பேரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தலைமறைவாக இருக்க கூடிய ஜெயக்குமார் எங்கே இருக்கிறார் ? என்ற கோணங்களில் சித்தாண்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கேரளா ,கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஜெயக்குமார் தனது மனைவியுடன் தான் தொடர்ந்து இருக்கிறார். எனவே அவரின் மனைவியின் செல்போன் மூலமாக அவரை பிடிப்பதற்கான பல்வேறு வியூகங்களை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே போல ஜெயக்குமாருடன் கடந்த 6 ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பதாக சித்தாண்டி விசாரணையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் யாரும் தனக்கு தெரியாது என்றும் , ஜெயக்குமார் மூலமாகத்தான் இந்த முறைகேட்டுக்கு பணம் கொடுத்ததாக சித்தாண்டி சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.இன்று மாலை சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கூடிய நிலையில் அவரின் நண்பர் காவலர் பூபதியிடமும் விசரனை நடைபெற்று வருகின்றது. அவர் முறைகேடு செய்து உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |