குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரானது நடைபெற்று வருகின்றது. இந்தப் போரானது அரசுக்கு ஆதரவான குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் துருக்கி படைக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் பயிற்சி மையங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் தங்கும் இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை அவர்கள் டிரோன்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்களை கொண்டு நடத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது முன்னதாக துருக்கி படைகளின் வசம் இருந்த அல் பாப் என்ற பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.