நமக்கு குறட்டை எதனால் ஏற்படுகிறது அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பனவற்றை பதிவில் நாம் காணலாம் :
குறட்டை விட்டு தூங்கும் மனிதர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு மயக்க நிலை. அது ஆரோக்கியமான தூக்கம் கிடையாது. என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலை நாடுகளில் குறட்டை விடும் கணவன்மார்களிடம் இருந்து விவகாரத்து பெறும் அளவுக்கு மிக பிரச்சினையாக குறட்டை நோய் உள்ளது. குறட்டை நாம் தூங்கும் போது ஏற்படுகிறது நமக்கு தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் பொதுவாக 7 சதவீதமான ஆண்களையும் 4 சதவீதமாக பெண்களையும் பாதிக்கிறது. பிரச்சினைகளில் குறட்டை மிகவும் முக்கியமானது. நாம் இரவில் குறட்டை விட்டுக்கொண்டு தூங்குவதால் காலையில் தலைவலி உடல் சோர்வு வேலையில் நாட்டமின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீண்ட அளவில் நாம் குறட்டை பிரச்சினைக்கு தீர்வு காணாத போது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், போன்ற பல நோய்களுக்கு குறட்டை நோய் மிக முக்கியமான காரணமாக அமைகின்றது.
முதலில் நாம் குறட்டைச் சத்தம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. பாதையில் எங்காவது தடை ஏற்படும் போது நமக்கு குறட்டை ஏற்படுகிறது. நாம் தூங்கும்போது மட்டும் தான் குறட்டை ஏற்படுகிறது. இது எதனால் தூங்கும்போது மட்டும் ஏற்படுகிறது என்பதை இப்போது காணலாம். நாம் தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. குறுகிய பாதையில் சுவாசக்காற்று நமது நுரையீரலுக்குச் செல்லும் போது குறட்டை சத்தம் ஏற்படுகிறது.மேலும் மல்லாந்து படுத்து உறங்கும் போதும் தளர்வு நிலையில் நான்கு சிறிது உள்வாங்கி தொண்டை குழிக்குள் இறங்கி விடும் இதனாலும் மூச்சு பாதைக்கு செல்லும் மூச்சு தடைபட்டு குறட்டை சத்தம் ஏற்படுகின்றது. மிக முக்கியமான காரணங்களாக மரபுவழி, உடல் பருமன், மூக்கடைப்பு , மூக்கு, இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ் வளர்ச்சி, தைராய்டு பிரச்சினை, போன்றவை பல காரணங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலத்தில் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புகைபிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுவது, போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுகிறது குறட்டை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் இந்த பதிவில் காணலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்னால் துரித உணவுகள் மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சளி, மூக்கடைப்பு தொல்லை, நமக்கு இருந்தால் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்னர் சுடு நீரில் ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. இது நமது மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தற்காலிக அடைப்புக்களை நீக்கி காற்று எளிதாக செல்ல வழி வைக்கிறது உயரமான தலையணையைப் பயன்படுத்தி உறங்குவதன் மூலமாகவும் குறட்டை ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம்.
மல்லாந்துப்படுப்பதை தவிர்ப்பதுடன் ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் குறட்டை ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம் மது, சிகரெட் , இது போன்ற போதைப்பொருட்களை குடிப்பதை நிறுத்துவதன் மூலமாகவும் நமக்கு ஏற்படும் குறட்டையை நாம் தவிர்க்கலாம். உடல் பருமன் இருப்பவர்களுக்கு குறட்டை ஏற்பட்டால் அதையும் குறட்டை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம் எனவே குறட்டை பிரச்சினையை தவிர்ப்பதற்கு முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மூலம் நல்ல தீர்வை நம்மால் காண இயலும். இது போன்று குறட்டை பிரச்சினையை தவிர்ப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கு ஏற்ப மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது சிறந்ததாக காணப்படுகிறது.