குறட்டை பிரச்சனையை தவிர்த்து நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வழி செய்வோம் ….
பொதுவாக குறட்டை பிரச்சனை யாருக்கு அதிகமாக வருகிறது என்று பார்த்தால் எடை அதிகம் உள்ளவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்களுக்கு வருகின்றது. மேலும் உள்நாக்கு பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது.
சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ சைனஸ் பிரச்சினை இருந்தாலோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் வரக்கூடும்,மேலும் ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் குறட்டை வரக்கூடும். குறட்டை நீங்க நமது மூச்சுக் குழாயில் உள்ள அடைப்பை நீக்கி பெரிதாக்க வேண்டும்.
- ஆவி பிடிப்பதன் மூலம் நாசித் துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் இதனால் இரவில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏதும் இருக்காது குறட்டை வருவது தடுக்கப்படும்.
- யூக்கலிப்டஸ் எண்ணெயை தலையணையில் லேசாக தெளித்து விட்டால் தூங்கும்போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.
- வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளிக்க குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
- துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால் குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
- சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி அத்துடன் தேன் .
கலந்து குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனை தீர்க்கலாம். - தினமும் சிறிது துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு அந்த நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலம் குறட்டை பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
- கற்பூரவள்ளி இலையை நன்றாக நசுக்கி அதை முகர்ந்து பார்த்துவிட்டு உறங்கலாம்.
இரண்டு மூன்று துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி சுத்தம் செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம். - வால்மிளகு ஊசியால் குத்தி நெருப்பில் காட்டி,வரும் புகையை மூக்கினுள் உரிஞ்ச கபத்தின் அடைப்பு நீங்கி விடும் இதனால் குறட்டையை தவிர்க்கலாம்.
- பால் பொருட்களை இரவில் உறங்கும்போது சுத்தமாக தவிர்க்கவும் வயிறு நிறைய சாப்பிட்டு விடாமல் சிறிது உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் காலாற நடக்கலாம்.
- பால் கலக்காத தேநீர் இஞ்சி சாறு கலந்தும் குடிக்கலாம் இதனால் மூச்சுக் குழாய் அடைப்பு நீங்கி விடும் மது மற்றும் சிகரெட் பிடித்தல் மூச்சு குழாயை பாதிப்படையச் செய்து தசையை வளர்க்கின்றது.
- இந்த பழக்கங்களை விட்டுவிட்டால் நல்லது அது மட்டுமன்றி மலச்சிக்கல் இல்லாத வாழும் இரவில் உணவைச் சூடாகவும் எளிதில் ஜீரணிக்கும் வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும், 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
- சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சினையை அறவே தவிர்க்கலாம் மேலும் குறட்டையை தவிர்ப்பது நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வலி உண்டாகும்