Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறவன், குறத்தி ஆட்டத்தை ஆபாசமாக சித்தரிக்கும் இணையத்தளங்கள்

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

 

சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய கலை நிகழ்ச்சி ஆடப்படும் பதிவேற்றத்தை  ஆபாசமாக பதிவேற்றம் செய்தும் அந்த வார்த்தைகளை உச்சரித்தும்,

மேலும் முகப்பில் அந்த சமூகத்தினை குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரிலும் ,மிக இழிவான வாசகங்களோடும்  பதிவேற்றம் செய்கிறார்கள். இதனால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குறவன் பழங்குடி மக்கள் நாங்கள் மிகப்பெரிய மன உளைச்சலால் பாதிப்பு அடைந்த்துள்ளோம். இதற்கு தமிழக அரசும் காவல்துறையும் நிச்சயமாக இதற்கு பதில் கூறபட வேண்டும்” என தெரிவித்தனர்.

 

Categories

Tech |