வீடு கட்டி முடித்து ஒப்படைக்க தாமதமானதால் வாகனம் நிறுத்தும் இடம் ஒதுக்குவதற்காக வசூலித்த 2 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்துமாறு கட்டுமான நிறுவனத்திற்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கே நாராயணன் மற்றும் எல். நாராயணன் ஆகியோர் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு 29.39 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் கொடுத்த கால அவகாசத்திற்குள் நிறுவனம் வீடுகளை கட்டி ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடம் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் தொடர்ந்து விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வாகனம் நிறுத்துவதற்காக கூடுதலாக வசூலித்த தொகையை கட்டுமான நிறுவனம் மனுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். மேலும் 30 நாட்களுக்குள் 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.