Categories
உலக செய்திகள்

குறித்த நேரத்தில் தரவில்லை… விமர்சனம் பெற்ற ஆஸ்ட்ரோசெனகா நிறுவனம்… 5 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது…!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் ஆஸ்ட்ரோசெனகாவின் தடுப்பூசிகளை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளது. 

பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ட்ரோசெனகா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம்,  ஒட்டுமொத்தமாக 300 மி.லி வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் முதல் நிலையாக மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை பெற தயாராக இருந்தது. ஆனால் 40 மில்லியன் மட்டுமே அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரோசெனகா தெரிவித்துவிட்டது.இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆஸ்ட்ரோசெனகாவின் இந்த செயலை பொறுப்பற்றதாக விமர்சித்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ரோசெனகா நிறுவனம் பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் செக் ரிபப்ளிக் ஆகிய 5 ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. இதில் 2 ,49 ,600 டோஸ்கள் இத்தாலியும், 2, 73, 600 டோஸ்கள், பிரான்ஸ் 40,000 டோஸ்கள், ஆஸ்திரியாவுக்கு 36,000 டோஸ்கள் மற்றும் செக் ரிபப்ளிக் 19200 டோஸ்கள் வழங்கியுள்ளது.

Categories

Tech |