Categories
டெக்னாலஜி

குறிப்பிட்ட உரையாடலை மட்டும் தனியே படிக்க….. வாட்ஸ் அப் கொண்டு வரும் சூப்பர் அம்சம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் தகவல்களையும் பரிமாறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் சமீபநாட்களாக புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட உரையாடலை தேட இனி முழு சாட்டையும் ஸ்க்ரால் செய்யத் தேவையில்லை. அதற்கு பதில் குறிப்பிட்ட தேதியை உள்ளீடு செய்து அந்த நாளுக்கான உரையாடலை மட்டும் தனியே படிக்க முடியும். விரைவில் இந்த அம்சம் அறிமுகமாக உள்ளது.

Categories

Tech |