பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்காமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் சமமான முறையில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமமான முறையில் 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.