திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் ஒரு கட்டுமான நிறுவனத்தினர் கட்டி வந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் 37 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நிறுவனத்தினர் 18 மாதங்களில் வீட்டை கட்டி தருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு மேல் காலதாமதம் ஆனால் அதற்கான வீட்டு வாடகை தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட நவீன வடிவில் வீட்டின் முகப்ப்பு பகுதியை அமைத்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வீடு கட்டி கொடுத்ததுடன், நவீன வடிவ முகப்பையும் அந்த நிறுவனத்தினர் அமைத்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிலாட்சன், உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் கட்டுமான நிறுவனத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் வழக்கு செலவு தொகை 2000 ஆகியவற்றை சொக்கலிங்கத்திடம் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்