கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு காலை 9 முதல் 10 மணி வரை 2 டவுன் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட இரண்டு பேருந்துகளில் தான் அனைத்து மாணவ மாணவிகளும் கல்லூரிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் வேறு வழியின்றி படிகட்டிகளில் தொங்கிய படியும் பயணம் செய்கின்றனர். அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து இடது புறமாக சாய்ந்தபடியே செல்கின்றன. இதனால் ஏதாவது பள்ளத்தில் இறங்கி ஏறும்போது பேருந்துகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.