உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம் டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு பிரிவை நோக்கி மட்டுமே ஆய்வில் விடப்பட்ட கொசுக்கள் விரும்பி தேடி சென்றுள்ளது. இது பற்றிய ஆய்வின் முடிவில் ஒரு குறிப்பிட்ட வகையான கார் பாக்ஸில் அமிலங்களை அதிக அளவில் உடலில் உற்பத்தி செய்பவர்களால் கவரப்பட்டு கொசுக்கள் செல்கின்றது.
இந்த அமிலங்கள் நம்முடைய தோலின் மேற்பரப்பில் ஈரம் தடுப்பானாக செயல்படும் சீபம் எனப்படும் பொருளில் இருக்கிறது. இதனை தோளில் உள்ள பாக்டீரியாக்கள் உபயோகித்துக் கொள்கிறது அதன் பின் நமது உடலில் இருந்து தனித்தன்மை கொண்ட மனம் வெளிப்படுகிறது இதனை கண்டறிந்து கொசுக்கள் அவர்களை தேடி செல்வது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் ஆய்வின் நோக்கம் மனிதர்களை நோக்கி கவரக்கூடிய அனைத்து விஷயங்களையும் கொசுக்கள் இழக்க வேண்டும் அல்லது கொசுக்களால் மனிதர்களை நோக்கி கவர முடியாமல் போவது போன்றவை ஏற்பட வேண்டும் என்பதை விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவற்றை கண்டுபிடிக்க முடியாதது தான் சற்று வருத்தம் என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர் ஏனென்றால் பெண் கொசுக்கள் வாழ்வதற்கு மற்றும் இனப்பெருக்கத்திற்காக ரத்தம் தேவைப்படுகிறது.
அது இல்லாமல் பெண் கொசுக்களால் எதுவும் செய்ய முடியாது அதனால் கொசுக்களின் மடம் கண்டறியும் பண்பு உறுதியாக உள்ள சூழலில் அவற்றின் உணவு பட்டியலில் முதல் இடத்தில் மனிதர்கள் இருக்கின்றார்கள். இருப்பினும் இந்த ஆய்வானது மலேரியாவை பரப்பக்கூடிய அனாபலிஸ் போன்ற பிற கொசு இனங்களை பற்றி ஆய்வாளர்களின் பரிசோதனைக்கு ஒன்றுதலாக இருக்கும் என ஆய்வாளர் வோஷால் தெரிவித்துள்ளார்.