எதிர்காலத்தில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிச்சயம் பொறுப்பேற்பார் என்று தைரியமாக கணித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியால் விக்கெட் இழப்பின்றி 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வரும் 13ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், எதிர்காலத்தில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிச்சயம் பொறுப்பேற்பார் என்று தைரியமாக கணித்துள்ளார். சில வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, கேப்டனாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கை வென்றதால், அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகத்தினர் குறிவைத்திருப்பார்கள். பாண்டியாவின் கீழ், குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2022 கோப்பையை தனது முதல் சீசனில் வென்றது. எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயமாக அணியைக் கைப்பற்றுவார், மேலும் சில ஓய்வுகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. வீரர்கள் நிறைய யோசிப்பார்கள். இந்திய டி20 அணியில் 35 வயதிலுள்ள பல வீரர்கள் அணியில் தங்களது நிலையை மறுபரிசீலனை செய்வார்கள் ” என்று கூறினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடரின் போது ரிஷப் பந்த் கேப்டனாக இருக்கும்போது பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். அதேபோல அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை வழிநடத்தினார் பாண்டியா.
வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியை பாண்டியா வழிநடத்துவார், துணைகேப்டனாக ரிஷப் இருப்பார் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஷிகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பார். தவனுக்கு துணைகேப்டனாக பண்ட் உதவுவார். நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஒருநாள் தொடர்களில் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வைப் பொறுத்தவரை நியூசிலாந்து T20I களுக்கு ஒரு சில மூத்த வீரர்கள்தேர்வு செய்யப்படாததால், அவர்களை படிப்படியாக வரும் டி20 போட்டிகளில் தேர்வுக் குழுகைவிடுமா என்பது போகபோகத்தான் தெரியும். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கி ), சஞ்சு சாம்சன் (வி.கீ ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :
ஷிகர் தவான்(கே), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (து.கே மற்றும் வி.கீ ), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – T20I தொடர் :
முதல் டி20 – நவம்பர் 18 ஆம் தேதி (ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன்)
2ஆவது டி20 – நவம்பர் 20 ஆம் தேதி (பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்)
3ஆவது டி20 நவம்பர் 22 ஆம் தேதி (மெக்லீன் பார்க், நேப்பியர்)
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2022 – ஒருநாள் தொடர் :
முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 25 ஆம் தேதி (ஈடன் பார்க், ஆக்லாந்து)
2ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 27 ஆம் தேதி (செடான் பார்க், ஹாமில்டன்)
3ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 30 ஆம் தேதி (ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்)
வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே ), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
வங்கதேச டெஸ்டுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK), கே.எஸ். பாரத் (WK), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
Sunil Gavaskar feels Hardik Pandya will take charge as captain after some surprise retirements👀 pic.twitter.com/ZpXdXI3fQa
— CricTracker (@Cricketracker) November 10, 2022