தமிழ்நாட்டை குறிவைத்து குதறுகிறது மோடி அரசு என்று ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றன. இதனால் மத்திய அரசு எப்படியாவது ஆக்சிஜனை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மாநில அரசின் ஒப்புதல் இன்றி வேறு மாநிலங்களுக்கு கொடுப்பதும், தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை குறைப்பதும், ஆக்சிஜன் தேவையை காரணம் காட்டி ஸ்டெர்லைட் என்ற நச்சு ஆலையை துடிப்பதும் என்று நம்மை குறிவைத்து குதறுகிறது மோடி அரசு. எனவே நாம் அதை எதிர்ப்போம் என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.