Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிக லாபம்” ரூ.4 1/4 லட்சத்தை இழந்த ராணுவ வீரர்….. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்த செல்வமணி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கார்த்திக்கின் வங்கி கணக்கை முடக்கினர். இதனை அடுத்து உரிய ஆவணங்களை காண்பித்து செல்வமணி அந்த பணத்தை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் பகுதி நேர வேலை, பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் என பொதுமக்கள் யாரையும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அப்படி நடந்தால் 1930 என்ற சைபர் கிரைம் அவசர உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |