குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் உறுப்பினர்களை கொண்டுள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு நேற்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றனர். இந்த 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பேனீஸ், மற்றும் ஜப்பான் பிரதமரான புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து தலைநகரான டோக்கியோவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டோக்கியோவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.