கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பிவிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் மாடுகள் சென்று கொண்டிருந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் இறங்கி நின்றுவிட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பிவிட்டனர். அதன் பிறகு பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளார்.