மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிஜன் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த குடிநீர் தொட்டியின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பென்சேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிஜனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பென்சேக்கின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.