Categories
மாநில செய்திகள்

குறுக்கே வந்த நாய்!…. நொடியில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் இச்சம்பவத்தில் ஆர்.எஸ் மங்கலத்திலிருந்து வந்த அரசு பேருந்து ஒன்று ராம்குமார் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ். மங்கலம் காவல்துறையினர் ராம்குமார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர்  வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |