Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்…. மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தங்கராஜ் என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜ் அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |