தபால் துறை அனுப்புவதாக இணையத்தில் வரும் குறுந்தகவல்களை கண்டு யாரும் நம்ப வேண்டாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரான மு.மாதேஸ்வரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தபால் துறையில் இருந்து அனுப்புவது போல தகவல்கள் இணையதளம் வாயிலாக செல்போனில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது. தபால்துறை மூலம் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறுஞ்செய்தி வாயிலாக அதற்கான லிங்க் ஐ அனுப்பி பயன்படுத்தும்படி கூறப்படுகின்றது. இதுபோல இணையத்தில் போலியாக வரும் செய்திகளைக் கண்டு யாரும் தங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம். காவல்துறைக்கும் இது போன்ற போலி செய்திகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆகையால் இது போன்ற போலி செய்திகளை கண்டு யாரும் ஏமாற வேண்டாம். இதுபோல நடக்காமலிருக்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது என கூறியுள்ளார்.