சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது சிங்கம் மற்றும் குரங்கு தொடர்பான ஒரு வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், 2 சிங்கங்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறது. இந்நிலையில் 1 குரங்கு ஒரு சிங்கத்தின் தோள்பட்டையில் அமர்ந்து செல்வதை நாம் வீடியோவில் பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கமும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக முன்னேறிச் சென்றது. இதனால் குரங்கு ஒரு அரசன் போலவும், சிங்கம் அதனுடைய செல்லப்பிராணி போலவும் இருந்ததை வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
कुछ कर गुजरने का जज्बा आपको शेर की सवारी भी करवा सकता है 😂#ViralVideo #ViralPost pic.twitter.com/dayEtINC3E
— Dr. Vivek Bindra (@DrVivekBindra) December 7, 2022