தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை சென்றடையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories