தமிழகத்தில் எழுத தெரியாதவர்களுக்கும், கையெழுத்து போட தெரியாதவர்களுக்கும் ‘புரட்சியின் எழுத்தறிவு இயக்கம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் கையெழுத்திடவும், பின்னர் படிப்பதற்கும் 89 நாட்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதியவர்களோடு அமர்ந்து நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன் கற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களது கையை பிடித்து எழுதிக் காண்பித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக எங்கு செல்கிறோமோ அங்கு ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தின் எழுத்தறிவு 81 சதவீதமாக உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. இதற்காக ஒரு கோடி பேருக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களில் கையெழுத்திடும் வகையில் அவர்களை தயார்படுத்த உள்ளோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.