Categories
தேசிய செய்திகள்

குறைந்து வந்த பாதிப்பு… திடீரென புதிய உச்சம்… கர்நாடக மக்கள் கவலை…!!!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,347 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் நேற்று 2,701 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,97,204 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 33,319 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |