Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் ஆக்சிஜன் இருப்பு… சேலம் உருக்கலைக்கு கடிதம் எழுதிய… சுகாதாரத்துறை அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் சேலம் உருக்காலைக்கு ஆக்சிஜன் கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

கொரோனா வைரஸின் 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொரோனா நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து சேலம் உருக்காலைக்கு தினசரி 500 லிட்டர்  திரவ ஆக்சிஜன் வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து உருக்காலையில் இருந்து 25% ஆக்சிஜன் கிடைத்தால் கூட பயனுள்ளதாக இருக்கும் என  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |