பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் “டாடா ஸ்டீல்” செயல்பட்டு வருகின்றது. இந்த ஸ்டீல் தயாரிப்பில், குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களுடன் கூடிய முறைக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக, அக்டோபர் 2021 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் ஐரோப்பா என்ற ஒற்றை நிறுவனத்திலிருந்து டாடா ஸ்டீல் யூகே மற்றும் டாடா ஸ்டீல் நெதர்லாந்து ஆகிய இரண்டு சுயாதீன நிறுவனங்களாகப் பிரிக்கும் செயல்முறையை டாடா ஸ்டீல் நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் யூகே, வருடத்திற்கு 5 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. அதே மாதிரி டாடா ஸ்டீல் நெதர்லாந்து வருடத்திற்கு 7 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஐரோப்பா நாட்டில் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையுடன் ஸ்டீல் உற்பத்தி செய்ய டாடா நிறுவனமானது தனது குறிக்கோளை நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றது. இதனை அடுத்து நிறுவனத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப, குறைந்த கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு மாறுவதற்கான விரிவான திட்டங்களை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் 2021-22 ஆண்டு அறிக்கையில் கூறியதாவது, “டாடா ஸ்டீல் நெதர்லாந்தில், ஹைட்ரஜன் மற்றும் மின்சார உலைகளை அடிப்படையாகக் கொண்ட, நேரடி குறைக்கப்பட்ட இரும்பு (டிஆர்ஐ) தொழில்நுட்பத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஸ்டீல் உற்பத்தியில் அடுத்த 10 ஆண்டுகளில் கொதிகலன் உலைகள் மற்றும் நிலக்கரிகளை படிப்படியாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.