மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 ரூபாய் கூடுதலாக பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து கூடுதலாக பெற்ற பணத்தை திருப்பி தர மறுத்ததால் அந்த தொகையை உரிய வட்டியுடன் திரும்ப தருமாறு நகைக்கடைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவினை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர்கள் வேலுமணி விமலா ஆகியோர் நகை கடை உரிமையாளர் மனுதாரருக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய பணம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்குமாறு அதிரடியாக உத்தரவிட்டனர்.