Categories
அரசியல் தேசிய செய்திகள்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் …. 3 சிறந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்….!!!!

நாடு முழுவதும் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் முதலீடு செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தபால் நிலைய திட்டங்களை பொதுமக்கள் அதிக அளவு விரும்புகின்றனர். அதில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதனை போல ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறு முதலீட்டாளர்களுக்கு தனியாக சில திட்டங்கள் தபால் அலுவலக திட்டங்கள் உள்ளது.

பொதுவாக தபால் அலுவலக திட்டங்கள் எந்த ஒரு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பணமும் அப்படியே இருக்கும், வட்டி மூலமாகவும் வருமானமும் கூடுதலாக உங்களுக்கு கிடைக்கும். எனவே நல்ல வருமானம் தரக்கூடிய 3 தபால் அலுவலக திட்டங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

தொடர் வைப்பு நிதி:

தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 5.8% பற்றி உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உங்களுடைய பணத்திற்கு காலாண்டு வாரியாக கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

நிலையான வைப்பு நிதி:

நிலையான வைப்பு நிதி திட்டம் என்பது ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை நீங்கள் முதலீடு செய்ய முடியும். இதில் மூன்று வருடங்கள் வரை 5.5%, 5 வருடங்கள் வரை 6.7% வட்டியும் வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ்:

NSC எனப்படும் இந்த திட்டம் 5 ஆண்டுகள் முதலீடு செய்யக்கூடிய திட்டமாகும். இதில் 6.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தில் பிரதமர் மோடியும் முதலீடு செய்துள்ளார். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்யலாம். சமீபகாலமாக பங்குச்சந்தை கடுமையாக சரிந்துள்ளதால் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு இந்த திட்டங்கள் சிறந்ததாக இருக்கும்.

Categories

Tech |