மிகக் குறைந்த முதலீட்டில் மாதம் 5000 ரூபாய் வரும் அதிரடி அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வகையில் அடல் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் இணைந்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக ஒருவர் பெறமுடியும்.
அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சந்தா செலுத்தவேண்டும். இவர்களுக்கு அரசு தன்சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் வழங்கும். இதில் சேர விரும்புபவர்கள், உங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் கணக்குத் தொடங்கவேண்டும். ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதே வங்கியின் மூலம் விண்ணப்பித்து இணைந்துக்கொள்ளலாம்.