இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. வீட்டுக்கடன் அடிப்படை வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி தற்போது உயர்த்தியுள்ளது. இருந்தாலும் எஸ்பிஐ வங்கியில் குறைந்த வட்டியிலும் வீட்டுக் கடன் பெற முடியும். இதனை பெறுவதற்கு உங்களின் சிபில் ஸ்கோர் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
அதாவது சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் குறைந்த வட்டிக்கு நீங்கள் வீட்டு கடன் பெற முடியும். சிபில் ஸ்கோர் ஒருவேளை குறைவாக இருந்தால் அதிக வட்டி உங்களுக்கு விதிக்கப்படும். பொதுவாக கடன் வழங்குவதற்கு முன்னதாக வங்கிகளால் சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் வாடிக்கையாளரிடம் இருந்து சரிபார்க்கப்படும். உங்களின் சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துபவரா என வங்கிகள் மதிப்பிடுகின்றனர்.
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் பெறும்போது, உங்கள் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு மேல் இருந்தால் 7.05% முதல் 7.45% வரை வட்டி விதிக்கப்படும்.
சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால் 7.15% வட்டி விதிக்கப்படும்.
700 – 749 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.25% வட்டி விதிக்கப்படும்.
600 – 699 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.35% வட்டி விதிக்கப்படும்.
550 – 649 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.55% வட்டி விதிக்கப்படும்.
அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு வீட்டுக் கடனில் 0.05% வட்டி தள்ளுபடி வழங்குகிறது.