Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்” தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி விக்னேஷ் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை விக்னேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளார்.

அதற்கான நடைமுறை செலவுகளுக்காக 40 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் கொடுத்த வங்கி கணக்கில் விக்னேஷ்குமார் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவர் கடன் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விக்னேஷ்குமார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் குமார் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |