Categories
அரசியல்

குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள்…. 1 லட்சத்திற்கு குறைந்த ஈஎம்ஐ தான்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தங்களின் பணப் பற்றாக்குறையை சரிசெய்ய பெரும்பாலானோர் பர்சனல் லோன் (தனிநபர் கடன்) வாங்குகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அல்லது விழாக்கால செலவுகளை எதிர்கொள்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் மட்டுமே முதன்மையான தேர்வாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பெல்லாம் வங்கியை தேடி செல்லும் நிலை இருந்தது.

தற்போது தனி நபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற நடைமுறைகள் டிஜிட்டல் முறையில் மாறிவிட்டன. தனிநபர் கடன் வழங்கும் முதன்மையான நிறுவனங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஒரு லட்சம் தொகைக்கான EMI எவ்வளவு, கடன் தொகைக்கான வருடாந்திர வட்டி எவ்வளவு, அதிகபட்ச கடன் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஹெச்டிஎப்சி வங்கி:

இந்த வங்கியில் 10.25 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,137 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 2.5 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

டாடா கேபிடல் :

இந்த வங்கியில் 10.99 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,174 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 2.75 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி :

இந்த வங்கியில் 10.25 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,137 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 2.50 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி :

இந்த வங்கியில் 10.25 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,137 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 1.5%முதல் 2 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி :

இந்த வங்கியில் 10.25 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,137 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 2.5 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

பஜாஜ் பின்சர்வ் :

இந்த வங்கியில் 13 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,275 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 4 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் :

இந்த வங்கியில் 10.49 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,149 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 3.50 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி :

இந்த வங்கியில் 9.60% முதல் 13.85 சதவீதம் வரை  வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.1,105 முதல் ரூ,2,319 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 1.5 சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

இண்டஸ்லேண்ட் வங்கி :

இந்த வங்கியில் 10.49 சதவீதம் முதல் வட்டி தொடங்குகின்றது. ஒரு லட்சத்திற்கான EMI ரூ.2,149 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கான தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை. தனிநபர் கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணம் 3சதவீதம் தொகை வரையில் வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |