பள்ளிப் படிப்பை முடித்ததும் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஆசைப்படும் மாணவர்களுக்கு போதைய அளவில் பண வசதி இல்லாததால் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க முடியாமல் போகிறது. இவ்வாறு படிக்க நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு பல வங்கிகளும் குறைந்த வட்டியில் கல்விக் கடனை வழங்கி வருகிறது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி குறைந்த வட்டியில் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி இதில் 1 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை வாங்குவதற்காக வாங்குவதற்காக வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஆன்லைன் மூலமாகவே எல்லாம் முடிந்துவிடும். இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இணைந்து படிக்கும் மாணவர்களும் இதில் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கடன் வாங்கிக்கொள்ளலாம். கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 9.5% இலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளது. ஐசிஐசி வங்கியின் இன்டர்நெட் வசதிக்கு சென்ற இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.