Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்க கட்டி…. வந்து வாங்கிட்டு போங்க…. ரூ 10 லட்சம் மோசடி… ஒருவர் கைது… 3 பேரை தேடும் போலீஸ்…!!!

செல்போன் கடைக்காரரிடம் ரூ 10 லட்சத்தை மோசடி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவருடைய மகன் அபுபக்கர் சித்திக்(32) செல்போன் கடை நடத்தி வருகின்றார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ள நிலையில், தனது நண்பரான ஜெராக்ஸ் கடை உரிமையாளரான அண்ணாதுரை என்பவரின் மூலம் மதுரை மாவட்டம் கே. புதூர் ராம லட்சுமண நகரில் வசித்து வந்த அரவிந்த்(49) என்பவர் அறிமுகமானார்.

இதையடுத்து அவர் தன்னிடம் 200 கிராம் தங்க கட்டி இருப்பதாகவும், அதனை கம்மியான விலைக்கு தருகிறேன் என்று கூறினார். அதன்பின் சேலத்தில் உள்ள தனது வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதை நம்பி அபுபக்கர் சித்திக் தனது அண்ணன் அப்துல் நாசருடன் ரூ 10 லட்சத்தை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொய்மான் கரடு பகுதிக்கு சென்றார்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அரவிந்தின் வீடு இங்கு தான் இருக்கின்றது வாருங்கள் என்று தெரிவித்து பைக்கில் அபுபக்கர் சித்திக்கையும், அப்துல் நாசரையும் அழைத்துக் கொண்டு சென்றார். அந்த மர்ம நபர் நாழிக்கல்பட்டி ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு வீட்டை காட்டி இதுதான் அரவிந்த் வீடு என்று தெரிவித்தார். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த 3 பேர் தங்களை கஸ்டம்ஸ் ஆபீசர் என்றும், நீங்கள் இருவரும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். அதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று தெரிவித்தனர்.

இவர்கள் 2 பேரையும் பைக்கில் அழைத்து வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். அதன் பிறகு அபுபக்கர் சித்திக், அப்துல் நாசர் இரண்டு பேரையும் காரில் கூட்டிச் சென்ற மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த பத்து லட்சத்தை பிடுங்கிவிட்டு சிறிது தூரம் சென்று அவர்களை இறக்கி விட்டு சென்று விட்டார்கள். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணன், தம்பி இரண்டு பேரும் மல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இப்புகாரின் பேரில் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அரவிந்தை நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மோசடி செய்ததாகவும், இதற்கு முன்னர் இதைப்போன்று இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |