Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம்…. ஐடெல் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்….!!

ஐடெல் பிராண்டில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களை குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஐடெல் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர் போன் மாடல் இன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய இயர் போன்களின் பெரிய சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 இயர்பட்களிலும் சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால் மிகச்சிறந்த ஆடியோ அனுபவம் கட்டாயம் கிடைக்கும். ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர் போன்களில் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி மற்றும் ப்ளூடூத் ஆகிய ஐந்து வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் 13எம்எம் சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. காதுகளில் கச்சிதமான முறையில் பொருத்திக் கொள்ளும் வடிவமைப்போடு இருக்கின்றது.

அதுமட்டுமன்றி 360 டிகிரி ஆடியோ அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. இரு இயர் களிலும் மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், படைப்புகளை எளிதில் ஏற்படும் மற்றும் இசையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதியும் வழங்கியுள்ளது. மேலும் 35எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் 2.5 மணி நேரத்திற்கு மேலாக மியூசிக் ப்ளே டைம் மற்றும் 3 மணி நேரத்திற்கும் மேலாக டாக்டைம் பெறலாம். ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர் போன்களுடன் 500 எம்ஏஎச் பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ் வசதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆறு முறை இயர்பட்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்று ஐடெல் நிறுவனம் கூறியுள்ளது. ஐடெல் ஐடிடபிள்யூ ட்ரூ வயர்லெஸ் இயர் போன்களின் விலை ரூ.1688 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இயர் போன்கள் தற்போது ஆன்லைன் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Categories

Tech |