ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அம்மாநில முதல்வர் பாராட்டியுள்ளார்.
தற்போது உள்ள சூழலில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று மலிவான விலையில் பேட்டரி மூலம் இயங்கும் பைக்குகளை அரசாங்கம் அங்கீ கரித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காம்தேவ் என்ற இளைஞன் மின்சார பைக்குகளை அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு பெட்ரோல் பைக்களுக்கு மாறாக இதை வழங்கியுள்ளார்.
இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற இந்த மாணவன் இரண்டு வருடம் கடின உழைப்பின் மூலம் இந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார் .இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வரும் சூழலில் இந்த போன்ற பைக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை இயங்கும். இந்த இரு சக்கர வாகனம் வெறும் 34 ஆயிரம் செலவில் உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது 16 வயதில் இருந்து அவர் இது குறித்து ஆராய்ச்சி செய்து வந்ததாகவும், தற்போது இந்த ஆராய்ச்சியை முடித்து புதிய பைக்கை கண்டுபிடித்தது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்பை ஜார்கண்ட் முதல்வர் ஹேம்நாத் பாராட்டியுள்ளார். சந்தையில் இதுவரை காணப்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் மின்சாரம் சார்ஜ் செய்யப்படுகின்றன. ஆனால் சூழலுக்கேற்ற இந்த பைக் பெடல் செய்வதன் மூலம் அதுவாகவே சார்ஜ் செய்து கொள்கின்றது.