Categories
ஆட்டோ மொபைல்

குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஏத்தர் நிறுவனம் அதிரடி….!!

Ather energy நிறுவனம் தற்போது Ather 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். Ather நிறுவன வழக்கப்படி அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும். இந்தியாவில் electric வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மானியம் திரும்ப பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் electric வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது.

Categories

Tech |