பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஒப்போ நிறுவனம் தற்போது குறைந்த விலையில் மின்சாரம் வாகனங்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. 2023- 2024 ஆண்டுகளில் அதன் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதன் விலை 60 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது.