ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புவர்களுக்கு சிறந்த அம்சங்களை கொண்ட குறைவான விலையில் புதிதாக போனகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன.அந்த வகையில், சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒவ்வொருவரின் விருப்பங்களும், தேவைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. சிலர் சிறந்த கேமராவை விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலரோ பேட்டரிகள், செயல்திறனில் சிறப்பு கவனம் செலுத்துவர். மேலும், போன் வாங்கும் போது மிக முக்கியமாக பயனர்கள் கவனிப்பது அதன் விலைதான். மேலும் விருப்பப்பட்ட அம்சங்கள் தங்களின் பட்ஜெட் எல்லைக்குள் இருக்கிறதா என்பதை கவனித்து பார்கிறார்கள். அந்தவகையில் ஸ்மார்ட்போன்கள்ல் ₹30,000-க்குள் சிறந்த அம்சங்களை கொண்டு வெளியாகியுள்ளது. அப்படி வெளியாகியுள்ள 5 ஸ்மார்ட் போன்கள் பற்றி பார்க்கலாம்.
- புதிதாக அறிமுகமான ஒன்பிளஸ் நார்டு CE2 5ஜி- இதன் விலை ₹23,999 முதல்₹27,999 வரை மற்றும் பேட்டரி 4500 mAh.
- சாம்சங் கேலக்ஸி M52 5ஜி -இதன் விலை ₹24,999, பேட்டரி 5000 mAh.
- ஜியோமி 11i ஹைப்பர் சார்ஜ் 5ஜி -இதன் விலை ₹28,999
- விவோ வி23 5ஜி -இதன் விலை ₹ 29,900.
- ஓப்போ ரெனோ 7 5ஜி -இதன் விலை ₹30,000.