ஹார்லி டேவிட்ஸன் நிறுவனமானது , சீன நிறுவனமான குயான்ஜாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து குறைந்தவிலை பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் முதன் முதலாக ஹார்லி டேவிட்ஸன் 338R என்ற பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக்கில் ரோட்ஸ்டர் பாடி ஒர்க் மற்றும் 500 சிசி பேரலல் ட்வின் இன்ஜினும் இடம்பெற்றிருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இந்த பைக் பெனிலி லியோசினோ 500 பைக்கை போன்ற பிரண்ட் சஸ்பென்ஷன், ஃபிரேம், ஸ்வின்கார்ம் மற்றும் ரேடிக்கல் பிரேக் காலிப்பர்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும் இந்த பைக்கில் ஹாண்டில்பார், ஃபூட்பெக் ஹாங்கர்ஸ், அலாய் வீல்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் இன்ஜினானது 500 bhp வரை டெலிவரி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மார்க்கெட்டில் இந்த பைக் 2024-ம் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.