இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். சமையல் எரிவாயு முதல் பெட்ரோல், டீசல், தங்கம் வரை அனைத்து பொருட்களும் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதில் அத்தியாவசிய மருந்து பொருட்களும் அடங்கும். இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் திணறிய வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட மொத்தம் 34 வகையான மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த பட்டியல் முதன்முதலாக 1996 ஆம் வருடம் வெளியிட்டப்பட்டது. இதன் பிறகு 2015 ஆம் வருடம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட 34 மருந்துகள் சேர்க்கப்பட்ட பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். இவ்வாறு இந்த பட்டியலில் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த மருந்துகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இந்த மருந்து பொருட்களை சேர்ப்பது நோக்கமே அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கப்பட வேண்டும் என்பது ஆகும்.