கடந்த மாதம் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கூட்டத்துக்குப் பிறகு சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று மத்திய உணவுத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சமையல் எண்ணெய் விலையை ரூ.10 முதல் ரூ.12 வரை குறைப்பதற்கு எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் வாரத்தில் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.